வஹ்ஹாபியம் என்றால் என்ன? அதன் நிறுவனரின் புலமைத்துவத் தகுதி என்ன? அதன் அடிப்படைக் கோட்பாடுகள் எவை? வஹ்ஹாபியச் சித்தாந்தம் என்கிற அஸ்திவாரத்தின் மேல் ‘சஊதி அறபிய ராஜ்யம்’ நிறுவப்பட்டதன் பின்னணி என்ன? அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பங்கு என்ன? தன்னோடு உடன்படாத பிற முஸ்லிம்களை வஹ்ஹாபியம் எப்படிப் பார்க்கிறது? சலஃபியமும் வஹ்ஹாபியமும் ஒன்றா? அவற்றுக்கு இடையில் பொதுவான - வேறுபட்ட பண்புகள் எவை? மரபார்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் வஹ்ஹாபியத்தை எப்படி மதிப்பிட்டார்கள்? இன்று வஹ்ஹாபியத்தை பிரதிநிதித்துவம் செய்வோரில் முதன்மையானவர்கள் யார்? ‘தொழில்முறை வஹ்ஹாபி எதிர்ப்பாளர்களின்’ தராதரம் என்ன? பலரும் பல்வேறு காரணங்களுக்காக வஹ்ஹாபியத்தை ஆதரித்தும் எதிர்த்தும் வருகிறார்கள். இந்நிலையில், அதனை அதற்குரிய இடத்தில் வைத்து சரியாகப் புரிந்துகொள்வதை இந்நூல் சாத்தியமாக்குகிறது.