அவனது கதை அவனுக்குத் தெரியும். வாழ்வு என்ற வார்த்தையின் கோணத்திலிருந்து அவன் வாழ்ந்ததும் அனுபவித்ததும் அவனுக்குத் தெரியும். ஆனால் அறபிகளாகவும் முஸ்லிம்களாகவும் உள்ள அவனுடைய உறவினர்கள் பற்றிய பெருங்கதையின் விரிவான விவரங்கள் தெரியாது. அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் இந்தப் பூமியின் மீது மனிதர்கள் கொல்வதும் கொல்லப்படுவதுமாக இருக்கிறார்கள். வானத்துடன் பூமிக்குள்ள உறவு என்ன? அவனால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஏனென்றால், இந்தக் கதை கதைக்குள் கதைக்குள் இருக்கும் உப கதை. பெட்டிக்குள் பெட்டிக்குள் இருக்கும் இன்னொரு பெட்டி. அவனிடம் இருப்பது அவன் தனது கைகளால் செய்த சிறிய பெட்டி மட்டும்தான். அவனுக்கு முக்கியமான எல்லாக் காகிதங்களையும் சாவிகளையும் நினைவுச் சின்னங்களையும் அதற்குள் இட்டு வைத்திருக்கிறான்.
-- நாவலிலிருந்து...