உள்ளீர்க்கும் புதிர்வெளி
மனம் என்னும் மாய நதி (பாகம் 2)

கட்டுரைகள்வாழ்வியல்

ஆசிரியர் : ஷாஹுல் ஹமீது உமரீ

பக்கங்கள் : 106 / விலை : ₹140

முதல் பதிப்பு : டிசம்பர் 2023

ISBN : 9788119667949

நம் வாழ்க்கையில் வெளிச்சமூட்ட, நமக்கு வழிகாட்ட சில வாசகங்கள் போதுமானவை. நம்மிடம் சொல்லப்படும், நாம் கேட்கும் எல்லாவற்றையும் நாம் நினைவில் கொள்வதில்லை. ஆனாலும் சில வாசகங்கள் நம்முள் ஆழமாக வேரூன்றிவிடுகின்றன. வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது கலங்கரை விளக்காக நின்று வழிகாட்டுகின்றன. எல்லாவற்றையும் நாம் கேட்டாலும் மனம் தனக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. மற்றவற்றை அது மறந்துவிடுகிறது அல்லது அவற்றைக் குறித்து லட்சியம் செய்யாமல் இருந்துவிடுகிறது.

இந்த வகையில் நல்ல வார்த்தைகள் மதிப்பு மிக்கவை. அவை தொடர்ந்து வாசிக்கப்படவும் கேட்கப்படவும் வேண்டும். கொட்டும் பேரருவியை நாம் முழுமையாகப் பருகிவிட முடியாது. ஆனாலும் நம் மனமும் வயிறும் குளிர்ந்துவிடும் அளவுக்கு நம்மால் பருக முடியும். வாசிப்பு அத்தகையை கொட்டும் பேரருவியைப் போன்றதுதான்.