மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்பது முதுமொழி. இன்னொன்றும் சேர்த்துச் சொல்லலாம். மனமது செம்மையானால் மருந்துகள் தேவையில்லை. ஆமாம். கோடிகோடியாகப் பணம், தொழில் நுட்ப வசதிகள் என எல்லாம் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்ந்து பயனில்லை. அந்த ஆரோக்கியத்தின் ரகசியம் மனம்தான் என்பதையும், ஞானியை வெளியே தேடவேண்டியதில்லை, நம் உடலும் ஒரு ஞானிதான் என்பதையும், மனமும் உடலும் தனித்துப் பார்க்க முடியாத, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்பதையும் ஆதாரங்களோடு நிரூபிக்கிறது நாகூர் ரூமியின் இந்த நூல்.