சமகால ஈரானிய இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளுள் ஒன்று. பல மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் திரைப்படப் பண்பு மிகுந்த படைப்பாக்கமாக கருதப்படுகிறது. வேறுபட்ட பல கதாபாத்திரங்களையும் கதைகளையும் கொண்டு பின்னப்பட்டுள்ள இக்குறுநாவல் நீதி, காதல், நோய், மனித அவலம், வாழ்வு, மரணம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த தத்துவ நோக்கை முன்வைக்கிறது. எந்தச் சிக்கலுமின்றி வாசகர்கள் மீது தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் ஆசிரியர் இப்பிரச்சினைகளை வார்த்தைகளுக்கும் கதைகளுக்கும் பின்னால் சாமர்த்தியமாக ஒளித்துவைத்திருக்கிறார்.