அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலொன்றை திடமான பாரசீகப் பட்டு நூல்களால் நெய்திருக்கிறார் முஸ்தஃபா மஸ்தூர். இப்புனைவின் வழியாக அவர் நாவலுக்கான மாதிரியை மீட்டுருவாக்கம் செய்வது மட்டுமன்றி, காதலை மீள் வரைவிலக்கணம் செய்வதனூடாக மனிதனையும் மீட்டுருவாக்கம் செய்கிறார். இது ஐயத்தையும் நம்பிக்கையையும் பற்றிய கதை. வேட்கையையும் தடுமாற்றத்தையும் பற்றிய கதை. காதலையும் தொலைதலையும் பற்றிய கதை. இது மனிதனின் கதை.