இந்திய நகரமொன்றில் துப்புரவுத் தொழில் செய்யும் சிறுவன் ஒருவனைப் பற்றியதே இந்நாவல். சிறுவனாக இருந்தவனை இளைஞனாக மாற்றுகின்ற ஒருநாள் அனுபவத்தையே இந்நாவலில் உயிரோட்டமாகச் சித்தரிக்கிறார் முல்க் ராஜ் ஆனந்த்.
சாதியத்தால் பெரும் கொடுமைக்கு உள்ளாகிற அந்தச் சிறுவன், சாதியை ஒழிக்க முன்வைக்கப்படும் தீர்வுகளின் போதாமையையும் உணர்கிறான். இதன் மூலமாக வாசகனுக்கு சமூக மாற்றத்தைக் கோருகின்ற ஆழமான ஒரு மன உணர்வையும் கையளிக்கிறான்.