இந்தியத் தத்துவ விவாதங்களில் உள்ள இடைவெளிகளைக் குறைத்து, கூடுதலான புரிதலை வளர்க்கும் வகையில் தமிழகத் தத்துவ விவாதங்கள் பங்களிப்பு செய்யக்கூடும் என்கிற நோக்கிலிருந்து செய்யப்பட்ட மிக முக்கியமான ஆய்வு இது. அடிப்படையில் ஒரு வாதநூலான நீலகேசி, தமிழின் ஆகச் சிறந்த தத்துவ நூல்களில் ஒன்று. ஆழ்ந்த தத்துவப் பயிற்சி கொண்ட முனைவர் மன்சூர், அதை ஆய்வு செய்யும் போக்கில் பழந்தமிழகத்தின் சமயத் தத்துவங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம், உலகாயதம், சாங்கியம், வைசேடிகம், மீமாம்சம் என அனைத்தைப் பற்றியும் விரிவானதும் ஆழமானதுமான அறிமுகத்தைத் தந்திருக்கிறார். தமிழ்நாட்டின் தத்துவங்கள் குறித்து அறிந்துகொள்வதில் ஆர்வமுள்ள எவரும் தவறவிடக் கூடாத நூல் இது.