ஒளி நிறமற்றது. ஆனால், ஆடியின் வழியே பாயும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிகிறது. மழைக்காலத்தில் நீராடி வழியே பாயும் கதிரொளி வானவில்லாய் வெளிப்படுகிறது. அதுபோல், குர்ஆன் வசனங்கள் ஒளியாகும். அவை அடியேனின் சிந்தை என்னும் ஆடியின் வழியே பல்வேறு கருத்துருவங்களாக வெளிப்பட்டதன் பதிவுகளே இக்கட்டுரைகள். எனவே, வானவில்போல் இந்நூல் ஒரு ஞானவில்!
இக்கட்டுரைகள் அனைத்தையும் இணைக்கும் மைய இழை மாமறையாம் குர்ஆன் மட்டுமே. எனினும், இக்கட்டுரைகளில் பல்சமய, பல்தத்துவ ஒப்பாய்வுப் பார்வைகள் ஆங்காங்கே இருக்கின்றன. ஞானம் என்னும் நமது தொலைந்த ஒட்டகம் சீனாவில் மேய்ந்துகொண்டிருந்தாலும் அதனைப் பிடித்துக்கொண்டு வரத்தான் வேண்டும், அல்லவா?