ஈர்க்கப்படும் பொருட்களுக்கும் புவியீர்ப்பு விசைக்கும் ஆன முடிவற்ற போராட்டம்தான் வாழ்க்கை. சராசரி பெரு ஓட்டமானது, தான் காணும் எல்லாவற்றின் மீதும் தனது வண்ணத்தைப் பூசிவிட எத்தனிக்கிறது; தன்னில் ஒன்றாகச் செரித்து தனது மாறாத குற்ற உணர்வைச் சமன்படுத்தத் துடிக்கிறது. எனினும், வட்டங்களுக்குள்ளும் சதுரங்களுக்குள்ளும் அடங்க மறுக்கும் 'அபத்தங்களை' நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் நம்மிடம் இருக்கும் இலக்கணங்களைக் கலைத்துப் போட வேண்டி இருக்கிறது. வாழ்வின் வெற்றி, தோல்வி பற்றிய வரையறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது. இந்நாவலில் விரியும் வாழ்வு அதைத்தான் செய்கிறது.