உலகில் சமூக நீதியைச் சாதிப்பதே இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் என்று சையித் குதுப் இந்நூலில் வலியுறுத்துகிறார். எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள், நபிமரபுச் செய்திகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனை நிறுவுகிறார். சையித் குதுபின் பிரமிக்க வைக்கும் கவித்துவ எழுச்சியுடன்கூடிய எழுத்து வன்மையும், இக்கருப்பொருள்குறித்து இஸ்லாமிய ஆய்வறிவுப் புலத்தில் எழுந்த முதல் தனி நூல் இதுவென்பதும் சேர்ந்து இப்பிரதியை முக்கியத்துவம் மிக்கதாக்குகின்றன.