90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின் காலம் என்றே சொல்லலாம். இந்துத்துவ அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்திலிருந்து அ.மார்க்ஸ் அதன் பல்வேறு பரிமாணங்களை மிகக் கூர்மையாக அவதானித்துப் பதிவுசெய்து வந்திருக்கிறார். ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு முகங்களின் நகர்வுகளையும் விளைவுகளையும் பற்றி அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
வகுப்புவாத அரசியலுக்கு எதிரான மாபெரும் ஆவணமாகத் திகழும் இந்நூல் மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பாதுகாப்பு, பெரும்பான்மைவாதத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டம் எனப் பல தளங்களிலும் விரிந்து, நம் காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் பல தவறான எண்ணங்களையும் பொய்களையும் அழுத்தமாக எதிர்த்துப் போராடுகிறது. புனைவுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைத் தேடிச் செல்கிறது.