ஹவாஸின் என்பது மக்காவில் குறைஷிகளுக்கு அடுத்ததாக பெரும் பலம் பெற்றிருந்த கோத்திரம். முஸ்லிம்களால் மக்கா வெற்றி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து குறைஷிகள் இறைத்தூதருக்குப் பணிந்துவிட்ட நிலையில், ஹவாஸின்கள் தன்னிகரற்றவர்களாக மாறினர்.
மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழையத் தொடங்கியிருந்த அவ்வேளையில், எதிரிகளின் அம்பறாத் தூணியில் எஞ்சியிருந்த கடைசி அம்பு மாலிக் பின் அவ்ஃப் எனும் ஹவாஸின் கோத்திரத் தலைவன். அவன் தலைமையிலான பெரும்படை முஸ்லிம்களுக்கெதிராக தொடுத்த போர்தான் ‘ஹுனைன் யுத்தம்’ என்று வரலாற்றில் பதிவாகியுள்ளது.
அந்தப் போருடன் ஒட்டிய மாலிக்கின் வாழ்வை கருவாகக் கொண்டு ஆதாரபூர்வமான வரலாற்றுத் தகவல்களின் துணையுடன் பின்னப்பட்ட சரித்திரக் குறுநாவல் இது.