ஆண்மை பற்றிய 40 நபிமொழிகள்
நல்ல ஆண்மகனாக இருப்பது பற்றி நபிகள் நாயகம் (அர்பஈன் தொடர் - 3)

ஹதீஸ்மொழிபெயர்ப்பு

தொகுப்பு : நபீல் அஸீஸ்

தமிழில் : ரமீஸ் பிலாலி

பக்கங்கள் : 100 / விலை : ₹110

முதல் பதிப்பு : டிசம்பர் 2023

ISBN : 9788119667123

மூலம் : Forty Hadith on Masculinity

ஆணை முன்னிறுத்திச் சொல்லப்படும் பல அறிவுரைகள் பெண்ணுக்கும் பொருந்தும். எனினும், ஆண்-பெண் இருவருக்குமே பொதுவாக இருப்பினும் சில நற்குணங்கள் பெண்ணைவிட ஆணிடமும், சில நற்குணங்கள் ஆணைவிடப் பெண்ணிடமும் அதிகம் எதிர்பார்க்கப்படுவதாகும்.

ஓர் ஆண் திட்டமிடுகிறான்; உடலை உறுதிசெய்கிறான்; சவாலாகும் சூழ்நிலைகளைப் பொறுமையுடன் எதிர்கொள்கிறான். ஓர் ஆண் வெட்கப்பட்டு விலகுவதோ ஒளிந்துகொள்வதோ கிடையாது. அவன் முரடாகவோ கட்டுப்பாடின்றியோ நடப்பதில்லை. ஆண் ஒருவன் எதற்கும் ஆயத்தமாக இருப்பவன். அனைத்துக்கும் மேல், மரணத்துக்கும் அதன் விளைவுகள் அனைத்துக்கும் தயாராக இருப்பவன்